Aadhaar Supervisor/Operator Recruitment 2026: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியா முழுவதும் ஆதார் துறையில் காலியாகவுள்ள 282 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026:
தனித்துவ அடையாள அங்கீகார ஆணையம் (UIDAI) என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இது நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும் அடையாளம் காண உதவுகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் போன்ற நாட்டில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது. பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் பிற சேவை பயன்பாடுகளை அணுகுவதற்கு இது கட்டாயமாக உள்ளது. பல்வேறு நோக்கங்களுக்காக ஆதார் அட்டையின் செயல்படுத்தல் அதிகரித்து வருவதால், ஆதார் ஆபரேட்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வேலைவாய்ப்புகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் ஆதார் தொழில் வாய்ப்புகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த ஆதார் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Aadhaar Supervisor/Operator Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) |
| காலியிடங்கள் | 282 |
| பணிகள் | ஆதார் ஆபரேட்டர்/ மேற்பார்வையாளர் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 31.01.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://cscspv.in/ |
காலிப்பணியிடங்கள்
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் – 282 காலியிடங்கள்
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
| மாநிலம் | காலியிடங்கள் |
| ஆந்திர பிரதேசம் | 04 |
| அசாம் | 03 |
| லடாக் | 01 |
| பீகார் | 04 |
| சண்டிகர் | 01 |
| சத்தீஸ்கர் | 08 |
| கோவா | 06 |
| குஜராத் | 10 |
| ஹரியானா | 07 |
| ஜம்மு & காஷ்மீர் | 09 |
| ஜார்கண்ட் | 07 |
| கர்நாடகா | 10 |
| கேரளா | 11 |
| மத்திய பிரதேசம் | 28 |
| மகாராஷ்டிரா | 20 |
| நாகாலாந்து | 01 |
| ஒடிசா | 02 |
| புதுச்சேரி | 01 |
| பஞ்சாப் | 12 |
| ராஜஸ்தான் | 04 |
| சிக்கிம் | 01 |
| தமிழ்நாடு | 03 |
| தெலுங்கானா | 11 |
| திரிபுரா | 01 |
| உத்தர பிரதேசம் | 23 |
| உத்தரகண்ட் | 03 |
| மேற்கு வங்காளம் | 05 |
| மேகாலயா | 01 |
| District Level Manpower | 98 |
| மொத்தம் | 282 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Aadhaar Supervisor/Operator Recruitment 2026 கல்வித் தகுதி
ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 ஆதார் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + 3 ஆண்டுகள் பாலிடெக்னிக் டிப்ளமோ (Polytechnic Diploma).
- 12-ஆம் வகுப்பு தேர்ச்சி. (அல்லது)
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + 2 ஆண்டுகள் ITI சான்றிதழ். (அல்லது)
Aadhaar Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Aadhaar Recruitment 2025 சம்பள விவரங்கள்
ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 ஆதார் ஆபரேட்டர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தோராயமாக ரூ.15,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Aadhaar Supervisor/Operator Recruitment 2026 தேர்வு செயல்முறை
ஆதார் சேவை மையம் ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் இல்லை
Aadhaar Supervisor/Operator Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.12.2025 முதல் 31.01.2026 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & ஆன்லைன் விண்ணப்ப படிவம் |
Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |






