Anna University Recruitment 2026: அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள 22 அலுவலக உதவியாளர் (Office Assistant), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), திட்ட உதவியாளர் (Project Assistant), ஆராய்ச்சி உதவியாளர் (Research Associate), முதன்மை ஆய்வாளர் (Project Scientist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Anna University Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | அண்ணா பல்கலைக்கழகம் Anna University |
| காலியிடங்கள் | 22 |
| பணிகள் | அலுவலக உதவியாளர் (Office Assistant), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), திட்ட உதவியாளர் (Project Assistant), ஆராய்ச்சி உதவியாளர் (Research Associate), முதன்மை ஆய்வாளர் (Project Scientist) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மற்றும் Email மூலம் |
| கடைசி தேதி | 10.01.2026 |
| பணியிடம் | சென்னை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.annauniv.edu/ |
Anna University Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
அண்ணா பல்கலைக்கழகம் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
| பதவி (Post Name) | காலியிடங்கள் |
| Project Scientist | 02 |
| Project Associate | 14 |
| Project Technician | 04 |
| Office Assistant (அலுவலக உதவியாளர் | 01 |
குறிப்பு: மேலும் விரிவான தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Anna University Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவி (Post Name) | கல்வி தகுதி (Qualification) |
| Project Scientist | Ph.D. / M.E / MS (Engg) |
| Project Associate | B.E/B.Tech, M.E/M.Tech or Ph.D |
| Project Technician | Any Diploma / Degree |
| Office Assistant (அலுவலக உதவியாளர்) | 10th / 12th Pass / Diploma |
சம்பள விவரங்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 2026-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய விவரங்கள் (Salary Details) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவி (Post Name) | மாதச் சம்பளம் (Salary) |
| Project Scientist | Rs. 40,000 – 1,00,000 |
| Project Associate | Rs. 20,000 – 60,000 |
| Project Technician | Rs. 15,000 – 25,000 |
| Office Assistant (அலுவலக உதவியாளர்) | Rs. 12,000 – 24,000 |
தேர்வு செயல்முறை
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- விண்ணப்பங்கள் பரிசீலனை: முதலில் நீங்கள் அனுப்பிய CV மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
- நேர்காணல் (Interview): தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள்.
- நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்கள் உங்களுக்குத் தனியாக (மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாக) அறிவிக்கப்படும்.
முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள் 24.12.2025
- விண்ணப்பம் முடியம் நாள் 10.01.2026
Anna University Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியுள்ளவர்கள் கீழே கொடுக்கப்படுள்ள வழிமுறைகளின்படி உங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம்:
1. தபால் மூலம் அனுப்ப:
- உங்கள் CV (Bio-data) மற்றும் தேவையான ஆவணங்களை 10.01.2026 தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
- முகவரி: இயக்குநர், மைய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Centre for Aerospace Research), MIT கேம்பஸ், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 044.
2. ஈமெயில் மூலம் அனுப்ப: தபாலில் அனுப்புவதுடன், உங்கள் விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து கீழே உள்ள ஈமெயில் முகவரிகளுக்கும் மறக்காமல் அனுப்பி விடுங்கள்:
- casr1516@gmail.com
- dircasr@annauniv.edu
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |






