Friday, January 9, 2026
whatsapp group
Homejobsupdate12வது தேர்ச்சி…தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை – சம்பளம்:ரூ.21,700 முதல்...

12வது தேர்ச்சி…தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை – சம்பளம்:ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை! NIT Trichy Recruitment 2026


NIT Trichy Recruitment 2026: National Institute of Technology (NIT) திருச்சியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள 08 ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant – Group C), சீனியர் அசிஸ்டெண்ட் (Senior Assistant – Group C), கண்காணிப்பாளர் (Superintendent – Group B) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி
National Institute of Technology, Trichy
காலியிடங்கள் 08
பணிகள் ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant – Group C),
சீனியர் அசிஸ்டெண்ட் (Senior Assistant – Group C),
கண்காணிப்பாளர் (Superintendent – Group B)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 30.01.2026
பணியிடம் திருச்சி
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nitt.edu/home/other/jobs/

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பதவி காலியிடங்கள்
ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant – Group C) 02
சீனியர் அசிஸ்டெண்ட் (Senior Assistant – Group C) 02
கண்காணிப்பாளர் (Superintendent – Group B) 04

குறிப்பு: மேலும் விரிவான தகவல்களுக்கு NIT திருச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

1. ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant – Group C)

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு (Senior Secondary – 10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் நிமிடத்திற்கு குறைந்தது 35 வார்த்தைகள் (35 w.p.m.) இருக்க வேண்டும்.
  • கணினியில் Word Processing (வேர்ட்) மற்றும் Spreadsheet (எக்செல்) ஆகியவற்றைக் கையாளுவதில் சிறந்த புலமை பெற்றிருக்க வேண்டும்.

2. சீனியர் அசிஸ்டெண்ட் (Senior Assistant – Group C)

இந்த பதவிக்கான கல்வி தகுதிகள் ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு இணையானவை:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு (Senior Secondary – 10+2) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
  • தட்டச்சு வேகம் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • Computer Word Processing மற்றும் Spreadsheet ஆகிய கணினிப் பயன்பாடுகளில் போதிய அனுபவம் மற்றும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

3. கண்காணிப்பாளர் (Superintendent – Group B)

இந்த உயரிய பதவிக்கு விண்ணப்பிக்கக் கீழ்க்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:

  • ஏதேனும் ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து முதல் வகுப்பில் (First Class) இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது, ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் (Master’s Degree) பெற்று, அதில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
  • இதனுடன் கூடுதலாக, Word Processing மற்றும் Spreadsheet போன்ற கணினிப் பயன்பாடுகளைப் பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருப்பது அவசியம்.

ஒவ்வொரு பதவிக்குமான அதிகபட்ச வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பதவி அதிகபட்ச வயது
Junior Assistant 27 வயது
Senior Assistant 33 வயது
Superintendent 30 வயது

வயது தளர்வு (Age Relaxation): அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு:

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (மாற்றுத்திறனாளிகள்): 10 முதல் 15 ஆண்டுகள் வரை (பிரிவைப் பொறுத்து)

NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய விவரங்கள் (Salary Details) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவி சம்பளம் (மாதம்)
Junior Assistant Rs.21,700 – Rs.69,100
Senior Assistant Rs.25,500 – Rs.81,100
Superintendent Rs.35,400 – Rs.1,12,400

NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 விண்ணப்பதாரர்கள் பின்வரும் மூன்று நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • Screening Test (முதற்கட்டத் தேர்வு)
  • Skill Test (திறனறித் தேர்வு)
  • Main Written Test (முக்கிய எழுத்துத் தேர்வு)
  • பெண்கள் / SC / ST / Ex-Servicemen: Rs.500
  • இதர பிரிவினர் (General/OBC): Rs1,000
  • மாற்றுத்திறனாளிகள் (PWD): கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பம் தொடங்கும் நாள் 02.01.2026
  • விண்ணப்பம் முடியம் நாள் 30.01.2026

NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் இதர ஆவணங்களுடன் 01.01.2026 முதல் 30.01.2026 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள நபர்கள் www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கைப் பயன்படுத்தி தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Group B அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click here
Group C அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular