Air Force School Avadi Recruitment 2026: ஆவடி விமானப்படை பள்ளியில் காலியாகவுள்ள 18 Helper, Watchman, PRT (Primary Teacher), PRT (Special Educator) மற்றும் NTT (Nursery Trained Teacher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Air Force School Avadi Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | ஆவடி விமானப்படை பள்ளி Air Force School Avadi |
| காலியிடங்கள் | 18 |
| பணிகள் | Helper, Watchman, PRT (Primary Teacher), PRT (Special Educator) மற்றும் NTT (Nursery Trained Teacher) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 20.01.2026 |
| பணியிடம் | ஆவடி – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://afschoolavadi.com/Carrier.html |
CSL Air Force School Avadi Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
ஆவடி விமானப்படை பள்ளி (Air Force School Avadi) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
| பதவி (Post Name) | காலியிடங்கள் |
| PRT | 03 |
| PRT (Special Educator) | 01 |
| NTT (Nursery Teacher) | 04 |
| Helper | 04 |
| Watchman | 06 |
Air Force School Avadi Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவி (Post Name) | கல்வித் தகுதி (Education Qualification) |
| PRT | Senior Secondary (50% marks) with D.El.Ed / B.El.Ed / Diploma in Special Education OR Graduation (50%) with B.Ed & 6-month Bridge Course. |
| PRT (Special Educator) | Senior Secondary (10+2) with 35 w.p.m. typing speed and proficiency in MS Word and Spreadsheets. |
| NTT (Nursery Trained Teacher) | Class 12th pass with D.Ed (Special Education) / DSE / DCBR / MRW / Junior Diploma in Teaching the Deaf / or any RCI recognized qualification. |
| Helper | 10th அல்லது 12th Pass + ஆங்கிலம் & ஹிந்தியில் பேச/எழுத தெரிந்திருக்க வேண்டும் |
| Watchman | 10th Pass (Matriculation) + பாதுகாப்பு பணிக்கு தகுதியான உடல்நிலை |
Air Force School Avadi Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பதவி (Post Name) | அதிகபட்ச வயது |
| PRT | 50 வரை |
| PRT (Special Educator) | 50 வரை |
| NTT (Nursery Teacher) | 50 வரை |
| Helper | 40 வரை |
| Watchman | 40 வரை |
அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு).இதற்கான வயது தளர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பிரிவு (Category) | வயது தளர்வு (Upper Age Relaxation) |
| SC / ST விண்ணப்பதாரர்கள் | +5 ஆண்டுகள் |
| OBC விண்ணப்பதாரர்கள் | +3 ஆண்டுகள் |
| PwBD (General / EWS) | +10 ஆண்டுகள் |
| PwBD (OBC) | +13 ஆண்டுகள் |
| PwBD (SC / ST) | +15 ஆண்டுகள் |
| முன்னாள் ராணுவத்தினர் | அரசு கொள்கையின்படி (As per Govt. Policy) |
சம்பள விவரங்கள்
ஆவடி விமானப்படை பள்ளி வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய விவரங்கள் (Salary Details) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவி (Post Name) | மாதச் சம்பளம் |
| PRT | Rs.28,500 |
| PRT (Special Educator) | Rs.28,500 |
| NTT (Nursery Teacher) | Rs.18,000 |
| Helper | Rs.13,000 |
| Watchman | Rs.13,000 |
தேர்வு செயல்முறை
ஆவடி விமானப்படை பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test / Teaching Aptitude Test (TAT)/ Practical/ Interview முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள்/ ST/ SC/ Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
- மற்றவ விண்ணப்பதாரர்களுக்கு– ரூ.1,000/-
- PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள் 01.01.2026
- விண்ணப்பம் முடியம் நாள் 20.01.2026
Air Force School Avadi Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
ஆவடி விமானப்படை பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், முதலில், https://afschoolavadi.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். பதிவிறக்கம் செய்த படிவத்தைப் பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பிழையின்றி முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, “The Principal, Air Force School Avadi, Chennai 600055” என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்து மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |






