Thursday, July 2, 2026
whatsapp group
Homejobsupdateரூ.41,509 சம்பளம்! தமிழ்நாட்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை – 180...

ரூ.41,509 சம்பளம்! தமிழ்நாட்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை – 180 காலியிடங்கள் || தகுதி:Any Degree LIC HFL Recruitment 2026

- Advertisement -


LIC HFL Recruitment 2026: இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ₹41,509 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2026க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்
LIC Housing Finance Limited
காலியிடங்கள் 180
பணி இளநிலை உதவியாளர் (Junior Assistant)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 30.04.2026
பணியிடம் தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.lichousing.com/

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 ஆனது கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பயார் காலியிடங்கள்
இளநிலை உதவியாளர் (Junior Assistant) 180
மொத்தம் 180

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

மாநிலம் / நகரம் காலிப்பணியிடங்கள்
ஆந்திரப் பிரதேசம் 08
அசாம் 03
பீகார் 07
சத்தீஸ்கர் 03
டெல்லி 03
குஜராத் 02
ஜம்மு மற்றும் காஷ்மீர் 01
கர்நாடகா 29
கேரளா 03
மத்தியப் பிரதேசம் 18
மகாராஷ்டிரா 25
ஒடிசா 07
பஞ்சாப் 01
ராஜஸ்தான் 01
சிக்கிம் 01
தமிழ்நாடு 21
– சென்னை 06
– கோயம்புத்தூர் 05
– மதுரை 04
– ஓசூர் 01
– காஞ்சிபுரம் 01
– காரைக்குடி 01
– கரூர் 01
– திருநெல்வேலி 01
– திருப்பூர் 01
தெலுங்கானா 24
உத்தரப் பிரதேசம் 13
உத்தரகண்ட் 01
மேற்கு வங்காளம் 09

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

LIC HFL-க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி மற்றும் இதர தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (01.04.2026 நிலவரப்படி):

தகுதி வகை விவரங்கள்
கல்வித் தகுதி ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Graduate in any discipline) பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் முன்னுரிமை அளிக்கப்படும் (Preferred – அனுபவம் இருந்தால் கூடுதல் சாதகம்).
கணினி திறன் கட்டாயம் தேவை (Yes).

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பிறந்த தேதி வரம்பு: விண்ணப்பதாரர் 02.04.1996-க்கு முன்னதாகவும், 01.04.2005-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது (இந்த இரண்டு தேதிகளும் கணக்கில் கொள்ளப்படும்).

வயது வரம்பு தளர்வு (Upper Age Relaxation):

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வுகள்:

விண்ணப்பதாரர் பிரிவு வயது தளர்வு அதிகபட்ச வயது
SC / ST +5 ஆண்டுகள் 35 வயது வரை
OBC (NCL) +3 ஆண்டுகள் 33 வயது வரை
மாற்றுத்திறனாளிகள் (PwBD) – General/UR +10 ஆண்டுகள் 40 வயது வரை
மாற்றுத்திறனாளிகள் (PwBD) – OBC +13 ஆண்டுகள் 43 வயது வரை
மாற்றுத்திறனாளிகள் (PwBD) – SC / ST +15 ஆண்டுகள் 45 வயது வரை
முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) மத்திய அரசு கொள்கையின்படி

LIC HFL நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நகரத்தின் அடிப்படையில் (City Category) சம்பளம் வழங்கப்படும். அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நகரத்தின் வகை (City Category) மாதாந்திர சம்பளம் (தோராயமாக)
வகை 1 (City Category 1) ₹41,509/-
வகை 2 (City Category 2) ₹39,909/-
வகை 3 (City Category 3) ₹38,709/-

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Online Examination
  2. நேர்காணல் (Interview)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

  • சென்னை
  • மதுரை
  • கோயம்புத்தூர்
  • நாகர்கோயில்
  • திருநெல்வேலி
  • தஞ்சை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • பட்டியல் பழங்குடியினர் (ST/SC)/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள் (PWD) விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.800/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026

LIC HFL எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 16.04.2026 முதல் 30.04.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, [https://www.lichousing.com/] என்ற இணையதளத்திற்குச் சென்று, “Click Here For New Registration” பட்டனைக் கிளிக் செய்து, முதலில் Register செய்ய வேண்டும். Register செய்த பிறகு, உள்நுழைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் குறித்த மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular