Tuesday, February 24, 2026
whatsapp group
HomeRecent Newsநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : இந்திய அணி அறிவிப்பு

- Advertisement -

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜனவரி 11 ஆம் தேதி வதோதராவில் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ஷுப்மன் கில் கேப்டனாக செயல்பட உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி வதோதராவில் நடைபெறும் முதல் போட்டியுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 14-ஆம் தேதி ராஜ்கோட்டிலும், மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி ஜனவரி 18-ஆம் தேதி இந்தூரிலும் நடைபெறவுள்ளன. அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular