Wednesday, April 29, 2026
whatsapp group
Homejobsupdate8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக அரசு NCC தேசிய மாணவர் படைத் துறையில் Store...

8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக அரசு NCC தேசிய மாணவர் படைத் துறையில் Store Attendant வேலை – ரூ.15,900 சம்பளம் || தேர்வு கிடையாது! NCC TN Recruitment 2026

- Advertisement -


NCC TN Recruitment 2026: தமிழ்நாடு தேசிய மாணவர் படைத் துறையில் (NCC TN) காலியாக உள்ள 02 Store Attendant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள் National Cadet Corps Department, Tamilnadu
தமிழ்நாடு தேசிய மாணவர் படைத் துறை (NCC – Tamil Nadu)
காலியிடங்கள் 02
பணிகள் Store Attendant
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 08.04.2026
பணியிடம் திருச்சி, திண்டுக்கல்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tn.gov.in/

NCC தமிழ்நாடு தேசிய மாணவர் படைத் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம் காலியிடங்கள்
Store Attendant 02 (ST Category) 

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் விவரம் தகுதிகள்
Store Attendant இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (8th Pass) பெற்றிருக்க வேண்டும். (குறிப்பு: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்).

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் ST (பழங்குடியினர்) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு பின்வருமாறு:

  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள் (நிறைவடைந்திருக்க வேண்டும்)
  • அதிகபட்ச வயது: 37 ஆண்டுகள் வரை
பணியின் விவரம் ஊதிய விகிதம்
Store Attendant Rs.15900 – 50400/- (Level 2)

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

NCC தமிழ்நாடு தேசிய மாணவர் படைத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.04.2026

NCC தமிழ்நாடு தேசிய மாணவர் படைத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான அனைத்து ஆவணங்களின் நிழற்பட நகல்களை (Xerox copies) இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் (Post) வழியாக அனுப்ப வேண்டும்.

முக்கியக் குறிப்பு:

விண்ணப்பம் அனுப்பப்படும் உறையின் மேல் (Outer Envelope), நீங்கள் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை “Application for the post of _______________” எனத் தெளிவாகவும், தவறாமலும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும் (Rejected).

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 4 (TN) Girls Bn NCC, 14, Arockiasamy Pillai Street, Crawford Colony, Tiruchirappalli – 620 012 Tele: 0431-2960173

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular