Thursday, July 2, 2026
whatsapp group
Homejobsupdate10-ம் வகுப்பு / டிப்ளமோ / டிகிரி தேர்ச்சி…மத்திய அரசு SECl நிலக்கரி உற்பத்தி நிறுவனத்தில்...

10-ம் வகுப்பு / டிப்ளமோ / டிகிரி தேர்ச்சி…மத்திய அரசு SECl நிலக்கரி உற்பத்தி நிறுவனத்தில் வேலை – 1055 காலியிடங்கள் || ரூ.47,330 சம்பளம்! SECL Recruitment 2026

- Advertisement -


SECL Recruitment 2026: இந்தியாவில் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான South Eastern Coalfields Limited (SECL), 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, சுரங்கத் துறையில் Mining Sirdar, Assistant Foreman மற்றும் Dy. Surveyor ஆகிய முக்கியப் பதவிகளில் மொத்தம் 1,055 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ஆம் வகுப்பு முதல், சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதம் ₹47,330 வரை சிறப்பான ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், வரும் 14.05.2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கான விரிவான கல்வித் தகுதிகள், வயது வரம்பு நிபந்தனைகள், தேர்வு முறை மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த முழுமையான தகவல்களைக் கீழே விரிவாகக் காணலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் South Eastern Coalfields Limited (SECL)
(சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்)
காலியிடங்கள் 1055
பணிகள் Mining Sirdar, Assistant Foreman மற்றும் Dy. Surveyor
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 14.05.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://secl-cil.in/jobs_secl

மத்திய அரசு SECL சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Mining Sirdar (T&S Grade-C) 577
Assistant Foreman (Electrical – Grade C) 43
Dy. Surveyor (T&S Grade – C Mining) 435

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு South Eastern Coalfields Limited வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Mining Sirdar (T&S Grade-C) 10-ஆம் வகுப்பு / Diploma / Degree (Mining Engineering) + Valid Mining Sirdar, Gas Testing & First Aid சான்றிதழ்கள்
Assistant Foreman (Electrical – Grade C) 10-ஆம் வகுப்பு / Diploma / Degree (Mining or Mine Surveying) + Valid Surveyor Certificate (SCC)
Dy. Surveyor (T&S Grade – C Mining) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + Electrical Engineering-ல் 3 வருட Diploma அல்லது அதற்கு மேல்

மத்திய அரசு SECL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

  • SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) பிரிவினருக்கு – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) பிரிவினருக்கு – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினருக்கு – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen பிரிவினருக்கு – அரசு விதிமுறைகள் படி

மத்திய அரசு SECL சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பதவியின் பெயர் மாதச் சம்பளம்
Mining Sirdar (T&S Grade-C) ₹47,330.25
Assistant Foreman (Electrical – Grade C) ₹47,330.25
Dy. Surveyor (T&S Grade – C Mining) ₹47,330.25

மத்திய அரசு SECL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 – ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.1,180/-
  • கட்டண முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.04.2026
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2026

மத்திய அரசு SECL சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.04.2026 முதல் 14.05.2026 தேதிக்குள் https://secl-cil.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular