Friday, May 8, 2026
whatsapp group
Homejobsupdateஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு – 337 காலியிடங்கள் || தகுதி: 12th/ITI/Diploma தேர்ச்சி.. ரூ.25,000...

ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு – 337 காலியிடங்கள் || தகுதி: 12th/ITI/Diploma தேர்ச்சி.. ரூ.25,000 சம்பளம்… தேர்வு கிடையாது! Aadhaar Supervisor Operator Recruitment 2026

- Advertisement -


Aadhaar Supervisor Operator Recruitment 2026: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் CSC இணைந்து இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள 337 ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI (2 ஆண்டுகள்) அல்லது பாலிடெக்னிக் டிப்ளமோ (3 ஆண்டுகள்) முடித்த விண்ணப்பதாரர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக, விண்ணப்பதாரர்கள் UIDAI அங்கீகாரம் பெற்ற முகமை மூலம் வழங்கப்பட்ட ‘Aadhaar Operator / Supervisor’ சான்றிதழ் பெற்றிருப்பது அவசியமாகும்.

தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 25,000/- வரை சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்த ஆர்வமுள்ள நபர்கள், வரும் 20.05.2026 தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் இந்திய தனித்துவ அடையாள
ஆணையம் (UIDAI)
காலியிடங்கள் 337
பணிகள் ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 20.05.2026
பணியிடம் தமிழ்நாடு (பெரம்பலூர்) & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cscspv.in/

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் – 337 காலியிடங்கள்

மாநில வாரியான காலியிட விவரங்கள்: https://csc.gov.in/ask

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

  • 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(அல்லது)
  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பாலிடெக்னிக் டிப்ளமோ (Diploma) முடித்திருக்க வேண்டும்.(அல்லது)
  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ITI முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் UIDAI அங்கீகாரம் பெற்ற தேர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் முகமையால் (Testing & Certifying Agency) வழங்கப்பட்ட “Aadhaar Operator / Supervisor Certificate” வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். (அதிகபட்ச வயது வரம்பு கிடையாது).

ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000/- சம்பளம் வழங்கப்படும்.. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஆதார் சேவை மையம் ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2026

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.04.2026 முதல் 20.05.2026 தேதிக்குள் https://csc.gov.in/ask இணையதளத்தில் சென்று சென்று உங்கள் மாநிலத்திற்கு நேராக இருக்க கூடிய Apply Now பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular