🔥 TNPSC Free Coaching 2026 – தமிழக அரசு இலவச பயிற்சி வாய்ப்பு
தமிழ்நாட்டில் TNPSC, SSC, IBPS, RRB போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆர்வலர்களுக்கு தமிழக அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
⚡ குறிப்பு: PDF திறக்கவில்லை என்றால் VPN அல்லது வேறு நெட்வொர்க் முயற்சி செய்யவும்.
முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| பயிற்சி மையம் | கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் |
| இடம் | காளாஞ்சிபட்டி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் |
| பயிற்சி வகை | TNPSC, SSC, IBPS, RRB |
| மொத்த இடங்கள் | 200 |
| பயிற்சி கட்டணம் | கட்டணமில்லை |
| பயிற்சி காலம் | 6 மாதங்கள் |
| விண்ணப்ப முறை | Online |
| விண்ணப்ப தேதி | மே 16 – மே 24 |
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
எந்த தேர்வுகளுக்கு பயிற்சி?
- TNPSC Group 4
- TNPSC Group 2
- SSC
- RRB
- IBPS
தேர்வு செய்யும் முறை
10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் இனவாரியான இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
உணவு / தங்கும் வசதி
உணவு மற்றும் தங்கும் வசதி இல்லை.
விண்ணப்பிக்கும் முறை
www.cecc.in மூலம் online விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது photo, signature, email ID மற்றும் mobile number தேவைப்படலாம்.
பயிற்சி தொடக்கம்
ஜூன் 2026 முதல் 6 மாதங்கள் முழுநேர பயிற்சி நடைபெறும்.
தொடர்பு விவரம்
Contact Number: 04553-291269




